சென்னையில் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில், வாலிபர்-இளம்பெண் தீக்குளித்து சாவு
சென்னை அண்ணா நகரில் இன்று பட்டப்பகலில் ஒருவாலிபர், நடுத்தெருவில் வாலிபர்
ஒருவரும், அவருடன்வந்த இளம்பெண் ஒருவரும் தீக்குளித்து இறந்தனர்.
அமைந்தகரையைச் சேர்ந்த டால்டா குமார், இன்றுசரஸ்வதி என்ற பெண்ணுடன் பைக்கில்வந்துகொண்டிருந்தார். அண்ணாநகரில் மக்கள் நடமாட்டம்உள்ள தெருவில் வண்டியை நிறுத்தினர். கண்ணிமைக்கும்நேரத்தில் டால்டா குமார் திடீரென அந்த பெண் மீதுமண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன்உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
இருவரும் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த பொதுமக்கள்அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள்இருவரும் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள்பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
நடுத்தெருவில் தற்கொலை செய்துகொண்ட அவர்கள்காதல் ஜோடியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள்? என்பது பற்றிபோலீசார் விசாரித்து வருகின்றனர்.


0 Comments