இமயமலைப் பகுதியில் 8 புள்ளி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு
இமயமலைப் பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளி அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் ஜம்மு, காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 8 லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து என தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு மலைப்பிரதேச பகுதிகளான இமாச்சல பிரதேசம் முதல் ஜம்மு, காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அங்கு 8 புள்ளி ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் நடந்தால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரும்.
இமாச்சல பகுதிகளில் 53 ஆண்டுகள் இடைவெளியில் நிலநடுக்கம் நடந்துள்ளது. முதலில் 1897 ஆம் ஆண்டு நடந்தது. பிறகு 1950 ஆம் ஆண்டில்தான் ஏற்பட்டது. இதேபோல அந்த மண்டலத்தில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய இழப்புக்கள் ஏற்பட்டது.
1950 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. அதே சமயம் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும். அதிக அளவில் பொருட்சேதமும் உண்டாகும். அதனால் அங்குள்ள வீடுகள் இடிந்தால் உயிர்சேதம் ஆகாமல் இருக்கும் வகையில் குடியிருப்புக்களை அமைக்க வேண்டும்.
நிலநடுக்கம் எங்கே, எப்போது ஏற்படும் என்று துல்லியமாக நாம் சொல்ல முடியாது. ஆனால் தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் இதிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்ற பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு சசிதர்ரெட்டி கூறியுள்ளார்.
0 Comments