கணினிப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள். வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மட்டும் இல்லையென்றால் இன்றைய இணைய உலகமே அப்படியே ஸ்தம்பித்துவிடும். காரணம் அந்தளவிற்கு வைரஸ்கள் பெருகி, அனைவரின் தகவல்களையும் திருடி அல்லோகலப்படுத்திவிடுவார்கள் இணையத் திருடர்கள்.
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.. கணினியைப் பாதுகாக்க வந்த தோழன் என்று கூட வர்ணிக்கலாம். அவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களில் முக்கியமானதும், கணினிக்கு வைரஸ்களிடமிருந்து நூறு சதவிகித பாதுகாப்பு வழங்கும் ஒரு வைரஸ் மென்பொருள்தான் அவாஸ்ட்.
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.. கணினியைப் பாதுகாக்க வந்த தோழன் என்று கூட வர்ணிக்கலாம். அவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களில் முக்கியமானதும், கணினிக்கு வைரஸ்களிடமிருந்து நூறு சதவிகித பாதுகாப்பு வழங்கும் ஒரு வைரஸ் மென்பொருள்தான் அவாஸ்ட்.
உலகின் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் இது.. நம்பகமானது. 25 ஆண்டுகாலமாக அனைத்து வித வைரஸ்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாகச் செயல்படும் ஒரே ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் அவாஸ்ட்.
இது கணினியில் உள்ள மால்வேர், வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் நிரலிகளைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கிறது. இணையம் மூலம் கணினிக்கு பரவும் வைரஸ்களையும் உடனடியாக தடுத்தி நிறுத்தி, அவற்றை நீக்கிடவா என கேட்டு நீக்குகிறது.
ஆன்லைன் அப்டேட்சையும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை செய்துகொள்கிறது.
1. Deep Screen Technology (Dynamic binary translation and dyna-gen) - இந்த தொழில்நுட்பம் அன்நோன்(Unknown) பைல்களைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.
2. Cloud Scaning முறை பயன்படுகிறது.
3. Mode stricter - தவறாக கணினியைப் பயன்படுத்தும்பொழுது எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம்
4. New Malware Protection- மால்வேர் புரோகிராம்களை முற்றிலும் தடுக்கும் தொழில்நுட்பம்
5. Safe Zone - இந்த நுட்பம் ஆன்லைனில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வதற்குப் பயன்படுகிறது.
6. Easy user Interface - புதியவர்களும் எளிமையாக கையாளும் இடைமுகத்தைப் பெற்றுள்ளது.
இலவசமாக இந்த மென்பொருளைத் தரவிறக்க செய்துகொள்ள செல்ல வேண்டிய தரவிறக்க முகவரி: To Download Avast Anti-virus
வைரஸ் பாதுகாப்பு குறித்த மற்ற தொடர்புடைய இடுகைகள்:
மேலும் பல.. பயனுள்ள பதிவுகள் இத்தளத்தில் உள்ளன. வலது புறம் உள்ள "இங்கு தேட" என்ற சர்ச் பாக்சில் வேண்டிய வார்த்தையை உள்ளிட்டு தேடி அவற்றைப் பெற முடியும்.
0 Comments