20 ஓவர் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் சச்சின் மற்றும் ட்ராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான டெண்டுல்கரும் ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளனர்.
இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ராகுல் டிராவிட்டோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே அறிவித்துவிட்டார்.
இருவரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடி வந்தனர்.
இதுவே தங்களது கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி என்று இருவருமே அறிவித்திருந்தனர்.



0 Comments