காதல்: அண்ணன் மனைவியை கொன்ற இளைஞன் தற்கொலை முயற்சி
பலாங்கொடை, வலேபொட பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை செய்தவர் 23 வயதான குறித்த பெண்ணின் கணவனது தம்பி என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலின்போது படுகாயமடைந்த பெண் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அப் பெண் உயிரிழந்துள்ளார்.
காதல் பிரச்சினை காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்த இளைஞன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments