Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக துறை சார்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்!

வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக துறை சார்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்!

வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் முதலமைச்சருடன் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய 4 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை மாகாண சபை கொண்டிருக்கும்.
இந்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சராக மருத்துவர் சத்தியலிங்கம் நியமிக்கப்பட உள்ளார். இவர்கள் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 20 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்றார்.
அதேவேளை கிளிநொச்சி மாவட்ட முன்னாள் கல்வி பணிப்பாளர் தம்பிராசா குருகுலராசா கல்வியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருகுலராசா கடந்த மாகாண சபைத் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இவர் மாகாணத்தின் கல்வி துறை தொடர்பில் சிறந்த அனுபவங்களை கொண்டுள்ளார்.
இவர்களை தவிர ஏனைய இரண்டு அமைச்சுக்களில் ஒன்று மன்னாரை சேர்ந்த பொறியியலாளர் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
மற்றைய அமைச்சு யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.கே. சிவஞானம் அல்லது புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு கூட்டங்களை நடத்துவதற்கான கட்டடங்கள் இல்லை என்பதுடன் அதன் வரவு செலவு என்பனவும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

Post a Comment

0 Comments