சுன்னாகத்தில் காவல் துறையினர் தேடுதல்வேட்டை.சந்தேகத்தின் அடிப்படையில் பலர்கைது.
சுன்னாகம் பொலிசாரினால் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து நள்ளிரவு வரை பரவலாக
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பலரின் மீதுவழக்குகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன .
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் தமது பிரிவுக்கு உட்பட்ட பல இடங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர் .
வீதிச்சோதனை நடவடிக்கைகளின் போது வீதி நடைமுறைகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்திய இருபத்தைந்து பேரும் , மது போதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேரும் பிடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .
மற்றும் பொது இடங்களில் இருந்து மதுபானம் அருந்தி பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
உடுவில் பிரதேசத்தில் பகிரங்கப் பிடியானைக்கு உள்ளாகிய ஒருவரும் மற்றும் உடுவில் குப்பிளான் பகுதிகளில் இருந்து பிடியானை பிறப்பிக்கப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் இவாகள் இன்று நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள் .
0 Comments