Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வட­மா­காண மக்கள் சரி­யான நேரத்தில் சரி­யான ஆணையை கூட்­ட­மைப்­பிற்கு வழங்கியுள்ளனர்.

வட­மா­காண மக்கள் சரி­யான நேரத்தில் சரி­யான ஆணையை கூட்­ட­மைப்­பிற்கு வழங்கியுள்ளனர்.


வட மாகாண சபைத் தேர்தல் முடிவானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறுபான்மை
மக்களுக்கான உரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உபதலைவருமான பொன் செல்வராசா தெரிவித்தார் .
 
அவர் மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண மக்கள் சரியான நேரத்தில் சரியான ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளனர் .
 
வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை வழங்குமாறு மக்களிடம் கேட்டு இருந்தோம் . ஆனால் அதையும் தாண்டி மக்கள் ஆணையை தந்துள்ளதையிட்டும் மகிழ்ச்சி அடைகின்றோம் . இந்த மகிழ்ச்சியில் கிழக்கு மாகாண தமிழ் மக்களும் இணைந்து கொள்கின்றனர் .
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படும் .
 
தமிழ் , முஸ்லிம் சமூகங்கள் இந்த மாகாணத்தில் ஒன்றிணைந்து வடக்கையும் கிழக்கையும் இணைப்பதன் மூலம் தமிழ் பேசும் சமூகங்கள் சுதந்திரமாக வாழ வழி வகுக்கும் . இந்த பாரிய வெற்றிக்கு காரணமாக இருந்த வடமாகாண மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவித்து கொள்கின்றது என்றார் .