Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழில் 87,870 வாக்குகளைப் பெற்று சாதித்த அனந்தி சசிதரன் (எழிலன்)

யாழில் 87,870 வாக்குகளைப் பெற்று சாதித்த அனந்தி சசிதரன் (எழிலன்)


பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டு துணிவுடன் வீரப் பெண்ணாக வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு வரலாறு படைத்திருக்கிறார் அனந்தி சசிதரன் அக்கா.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு அடுத்தபடியாக 87,870 விருப்பு வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழர் தேசத்தில் போரால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி. ஆகவே அப்படியான பெண்களின் வாழ்வை முன்னேற்றுவதே தனது பிரதான இலக்கு என்பதனை அடிக்கடி வலியுறுத்தியவர்.
அவரின் வீடு தாக்கப்பட்டதில் இருந்து அவரைப் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட வதந்திகளை பரப்பியும், அச்சுறுத்தல் விடுத்தும் அவரை தோற்க்கடிக்க இராணுவமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும், துணை இராணுவக் குழுக்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் இறுதியில் முதலமைச்சர் வேட்பாளரைத் தவிர்த்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார் அனந்தி அக்கா.
ஈழத்தில் அனைத்தையும் இழந்து ஏதிலிகளாக உள்ளோருக்கு அனந்தி அக்கா ஒரு மிக சிறந்த வழிகாட்டி, ஆதர்சனம். அவரின் மன உறுதியை நாங்கள் வியந்து பாராட்டுகிறோம்…

Post a Comment

0 Comments