அதிபர் ஆசிரியர்களுக்கான வேதன விடயம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பால், கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த அதிருப்தியை வெளியிட்டார்.
ஆசிரியர்-அதிபர்கள் அனைவரும் இணைந்து தங்களின் வேதன முரண்பாட்டை நீக்குவதனை முதன்மைக் காரணமாகக் கொண்டு போராடினர்.
வேதன முரண்பாடுகள் குறித்து எந்தவிதமான பேச்சுக்கும் இடமில்லை என்றும், இந்தப் பிரச்சினையைப் பேச யாருமே வீதிக்கு வர வேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
வேதனங்களுக்கான ரூபா 110 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, அதைப் பெற்றுக்கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் ஆசிரியர்கள் மிகப் பெரிய பங்காற்றினர் .அவர்கள் ஒரு சில எதிர்பார்ப்புகளுடன் பணியாற்றினர்.
இந்தநிலையில், ஜனாதிபதியின் அறிவிப்பு மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு, அரசாங்கத்தின் விருப்பங்களை நிறைவேற்றச் சொல்வது போல உள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஒதுக்கிவிட்டு, அமைதியாக இருக்க வேண்டும் என்றும், ஒரு குழுவை நியமித்து, அவர்களிடம் சென்று பேசுங்கள் என்றும் அரசாங்கம் கூறுகிறது.
இது முற்றிலுமான எதிர்பார்ப்புகள் சீர்குலைக்கப்பட்டதொரு நிலை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱**
*https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA*
*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*
📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்*
*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்*
*https://wa.me/+94773418460*
📲
*எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇
*https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13
🙏
*_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*


0 Comments