2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, இதற்கு இணங்கப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறக்கும்போது ஆசிரியர்கள் ஒருநாள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“பாடசாலையின் நேர நீடிப்புக்கான முடிவை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது எந்தவொரு உளவியல் அல்லது கல்வி ஆய்வு பூர்வமான முடிவும் அல்ல. எனவே பாடசாலை நேர நீடிப்பு குறித்த தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த தீர்மானத்துக்கு சங்கம் எக் காரணம் கொண்டும் இணங்காது என்றும் ஆனால், இதுதொடர்பில் அதிகாரிகள் தரப்புடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments