ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று (20) மத்துகம நீதவான் அசங்க ஹெட்டியாவத்த முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போலி தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் வண்டி ஒன்று தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்று (19) கைது செய்யப்பட்டார்.
0 Comments