Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

*தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை கொலை செய்த கணவன் !*



கேகாலை, தெஹியோவிட்ட, கஹனாவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.

கொலைசெய்யப்பட்டவர் திபிரிபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.


குறித்த பெண் தனது கணவரை விட்டு பிரிந்து கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டில் தனது பிள்ளையுடன் வசித்து வந்துள்ளார்.


சம்பவத்தன்று, பெண்ணின் கணவர் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.


தகராறின் போது பெண்ணின் கணவர் கொலை செய்யப்பட்ட நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.


காயமடைந்தவர் கரவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தகராறின் போது குறித்த பெண்ணும் அவரது பிள்ளையும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவத்தையடுத்து பெண்ணின் கணவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை (30) காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைதுசெய்யப்பட்டவர் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.


இது தொடர்பான மேலதிக விசரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱** 

 *https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA* 

*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*


📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்* 


*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்* 


 *https://wa.me/+94773418460* 


📲

 *எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇

 *https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13


🙏

 *_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*

Post a Comment

0 Comments