Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் ; கல்வி அமைச்சர் ஹரிணி வெளியிட்டுள்ள முக்கிய விடயங்கள்

 


நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்:

முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம்

இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments