மக்களின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகளை மின்சார சபை ஏற்கனவே பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக தெரிவித்தார்.
மின் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான அடிப்படை வேலைகள் அதாவது விலை திருத்தம் அடுத்த மாதம் ஆரம்பத்திற்கு முன்னர் கொண்டுவரப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அருந்திக மேலும் தெரிவித்தார்.
“.. என்னால் எவ்வளவு சதவீதத்தால் மின்கட்டணம் குறையும் என இங்கு சொல்ல முடியாது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுதான் அதற்கு முழுப் பொறுப்பு. நாம் காட்டும் இலக்குகளுக்கும் அந்த இலக்குகளுக்கும் இடையில்
இப்படித்தான் மின் கட்டணம் குறைகிறது
முரண்பாடுகள் இருந்தால், அது ஒரு பிரச்சினையாகும். நாம் உறுதியான குறைப்பைச் செய்ய முடியும். குறைக்காது மீண்டும் அதிகரிக்காது.. தொடர்ந்து கொண்டு செல்லக்கூடிய திட்டம் இது..
நாங்கள் வழங்கிய தரவுகள் பொதுப் பயன்பாட்டு ஆணையத்தால் கிட்டத்தட்ட 20 நாட்களாக சரிபார்க்கப்பட்டு வருகிறது. எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு முன் விலை திருத்தத்தை வழங்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்…”
இந்நிலையில் மின்கட்டணத்தை கூடிய விரைவில் 50 சதவீதத்தால் குறைக்க இயன்றளவு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நந்திக பதிரகே நேற்றைய(04) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
0 comments: