Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையில் மாற்றம்

 


போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்ததாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பது தொடர்பில் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“போக்குவரத்து தொடர்பில் தேசிய கொள்கை இல்லாதது இங்குள்ள பிரதான பிரச்சினையாகும். இது தொடர்பில் தலைமை தொழிற்சங்கத்தினால் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது.

25 வருட கால தேசிய கொள்கையின் ஊடாக இந்த நாட்டில் நாளைய போக்குவரத்து திட்டத்தை உருவாக்க முடியாது. எனவே, நாட்டுக்கு ஏற்ற தரமான பயணிகள் போக்குவரத்து சேவையை பேணுவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன போக்குவரத்து திட்டத்தை உருவாக்க புதிய தேசிய கொள்கையை உருவாக்குவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

நவம்பரில் தேசிய கொள்கையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாக அவர் எங்களிடம் ஒப்புக்கொண்டார்…” எனத் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments