Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!




 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி இன்றும்,நாளையும் இரண்டு நாட்களுக்கு இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் குறித்த சந்திப்பில், நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

இதேவேளை நாளைய சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments