(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இறுதி நாள் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கோட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
கோட்டமட்ட போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக கலந்து கொண்ட தரம் 06ம் பிரிவில் கல்வி கற்கும் எஸ்.எப். அஸ்ரிபா 12வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 100 மீட்டர், 60 மீட்டர் ஓட்டப் போட்டி மற்றும் நீளம் பாய்தல் ஆகிய மூன்று தனி நிகழ்ச்சிகளிலும் முதலிடத்தைப் பெற்று அந்த வயதுப் பிரிவில் சாம்பியனானார்.
கல்முனை கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சம்பியன் பெற்ற மாணவியை திறம்படவழிப்படுத்திய இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எச். நதீரா, உடற்கல்வி பாட ஆசிரியர்களான எம்.ஆர்.எம். றப்கான், எம்.ஜ. ரஃபீக்கா பீவி (தரம் - 07 பகுதித் தலைவி), எம்.எம். றிசான், ஆர்.எம். அஸ்மி, எம்.ஜ. சாமிலா (தரம் - 08 பகுதித் தலைவி) மற்றும் சாதனை படைத்த மாணவிக்கும் பாடசாலை சார்பாக அதிபர் யூ.எல்.எம். அமீன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
எஸ்.எப். அஸ்ரிபா சம்பியன் பெற்றமைக்காக கல்முனை கோட்ட கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட சம்பியன் வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை
குறித்த மாணவிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை அதிபர் அலுவலகத்தில் கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம். அமீன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா மற்றும் உடற்கல்வி பாட ஆசிரியர் எம்.ஆர்.எம். றப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments: