Advertisement

Responsive Advertisement

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு !

 


சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதையடுத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ளதாக அந்தச் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகள் 07 வீதத்தால் குறைந்துள்ளன.

ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையும் பட்சத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் வீழ்ச்சியடையலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments