அகில இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களங்களுக்கிடையிலான 2022 ஆம் ஆண்டிற்குரிய மல்யுத்த சுற்றுப் போட்டியானது இம்முறை பொலன்னறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு பிரதம அதிதிகளாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் கொடித்துவக்கு அவர்களும் பொலன்னறுவை சிறைச்சாலை அதிகாரி, மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரி, பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் மட்டக்களப்பு சிறைச்சாலை தங்கம் 09 வெள்ளி 02 மற்றும் வெண்கலம் 04 பதக்கங்களை பெற்று மல்யுத்த சம்பியன் எனும் பட்டத்தை பெற்றதோடு அகில இலங்கை சிறைச்சாலைகளுக்கிடையில் முதலாம் இடத்தையும் பெற்றது.
மற்றும் யாழ்ப்பாண சிறைச்சாலை இரண்டாம் இடமும் பொலனறுவை சிறைச்சாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுகொண்டது.
சிறந்த மல்யுத்த வீரருக்கான விருதையும் மட்டக்களப்பு சிறைச்சாலையே தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து சிறைச்சாலை அத்தியட்சகர் கருத்து தெரிவிக்கையில் இனி வரும் காலங்களிலும் தான் இங்கு இருக்கும் வரை மட்டக்களப்பு சிறைச்சாலை முதலிடத்தை பெறும் அதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்க நான் தயார் எனவும் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டம் குறித்து நோக்குகையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு பயிற்சி வழங்கிய பயிற்றுவிப்பாளர் திரு திருச்செல்வம் என்பவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு என்று இல்லாமல் இலங்கைக்கே கிடைத்த அரிய பொக்கிசம் என்றே கூறக் கூடிய அளவு திறமை மிக்கவரும் நேர்மையானவரும் ஆவார் இவரின் ஆபாரா திறமையினாலேயே இன்று மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் சிறைச்சாலை என்பன மல்யுத்தம் என்றால் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது இவரின் பயிற்றுவிப்பினால் மட்டக்களப்பு சிறைச்சாலையை சேர்ந்த சிவபாலன் எனும் உத்தியோகத்தர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மற்றுமொரு இளைஞனும் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக அகில இலங்கை திறந்த தேசிய போட்டியில் பங்கு பற்றி இலங்கை தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: