"13 ம் திருத்த சட்டதை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை"
இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் பௌத்த பிக்குகள் கொழும்பில் 13 ம் திருத்தத்தின் பிரதியை எரித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில், ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அதிபர் ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதிபர் ரணில்
மேலும் கருத்துரைத்த அவர்,
"இந்த நாட்டில் மதிக்கப்பட வேண்டிய பௌத்த பிக்குகளின் இவ்வாறான அவசர நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அண்மையில் மகாநாயக்கர்களை சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டதை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும், அதன்மூலம் ஏற்படும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் தெளிவாகக் கூறியிருந்தேன்.
மகாநாயக்க தேரர்களும் என்னுடைய கருத்தை வரவேற்றிருந்தனர்.
இந்த சூழ்நிலையில், பிக்குகளில் ஒரு பகுதியினர் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை, இருப்பினும் இந்த விடயத்தை அரசமைப்பு ரீதியில் நான் கையாள்வேன்." என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments: