Advertisement

Responsive Advertisement

பலாங்கொட ஜெய்லானி தேசியக் கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட சதுரங்க போட்டியில் சாதனை

 



அஸ்ஹர் இப்றாஹிம்

சபரகமுவ மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க  சுற்றுப்போட்டியில் இரத்தினபுரி , பலாங்கொட ஜெய்லானி தேசியக் கல்லூரி  மாணவ மாணவிகள் வெற்றி பெற்றதுடன் மிகவும் குறைந்த  புள்ளி வித்தியாசத்தில் தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும்  இழந்தனர். 

இம் மாணவ மாணவிகள் குறுகிய காலத்திற்குள் சதுரங்க விளையாட்டை பயின்று திறமையாக விளையாடக் கூடிய போட்டியாளர்களை எதிர்த்து வெற்றியீட்டினர்.

பட்டுஹேன தேசிய பாடசாலையில்  இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தினால் (Srilanka School Chess Association) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியில்

13வயது ஆண்கள்,  13 வயது பெண்கள்,  15வயது பெண்கள்,  17வயது பெண்கள்  ஆகிய 4 வயதுப் பிரிவில் 28 மாணவ மாணவிகள்  பங்கு பற்றினர். 

இப்போட்டியில் 13வயது ஆண் மாணவர் பிரிவில் எம்.வை.ஏ.ஹஸீர்  அவ்வயதுப் பிரிவில் நடைபெற்ற 5 போட்டிகளிலும் சிறப்பு வெற்றி பெற்று பங்கு பற்றிய 150க்கு மேற்பட்ட மாணவர்களுள் சிறந்த வீரராக (CHAMPION) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக  மாணவர்கள் இவ்வாறானதொரு சதுரங்க விளையாட்டு போட்டியொன்றில் மாகாண மட்ட போட்டியில்  பங்குபற்றி  மிகத்திறமையாக விளையாடி பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஜே.எம்.மன்சூர் தெரிவித்தா

Post a Comment

0 Comments