Advertisement

Responsive Advertisement

50 முதல் 100 ரூபாவால் சடுதியாக குறையவுள்ள எரிபொருள் - வெளியான தகவல்

 


ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.

இந்த விலை குறைப்புடன் ஒப்பிடும் போதே ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீதம் குறைவு

50 முதல் 100 ரூபாவால் சடுதியாக குறையவுள்ள எரிபொருள் - வெளியான தகவல் | Sri Lanka Diesel Price Today Decrease

நாட்டில் எரிபொருள் பயன்பாடு தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் ஒருவர் கூறுகையில், நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.

எரிபொருளின் தேவை

50 முதல் 100 ரூபாவால் சடுதியாக குறையவுள்ள எரிபொருள் - வெளியான தகவல் | Sri Lanka Diesel Price Today Decrease

பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மட்டும் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் தேவை குறைந்துள்ளது.

நெருக்கடிகளுக்கு முன்னர் உள்ள காலப்பகுதிகளில் சுமார் 4000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசல் தேவைப்பட்ட நிலையில் தற்போது அது 2000 மெட்ரிக் தொன்களாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

Post a Comment

0 Comments