Advertisement

Responsive Advertisement

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது !

 


மடு பொலிஸ் பிரிவில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் நேற்று (8) வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன் திருடப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை சந்தேக நபர்களிடம் இருந்து மடு பொலிஸார் மீட்டுள்ளனர்.

மடு பொலிஸ் பிரிவில் உள்ள இரணையிலுப்பைக்குளம் பகுதியில் கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி வர்த்தக நிலையமொன்றை உடைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இம்முறைப்பாட்டை தொடர்ந்து மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே மடு பொலிஸார் நேற்று சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரும் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணையின் பின் சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments