Home » » இன்று எரிபொருள் விலையில் மாற்றம்..! வெளியாகியுள்ள தகவல்

இன்று எரிபொருள் விலையில் மாற்றம்..! வெளியாகியுள்ள தகவல்

 


விலை

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

விலை குறைய வாய்ப்பு

இன்று எரிபொருள் விலையில் மாற்றம்..! வெளியாகியுள்ள தகவல் | Fuel Price Srilanka Petrol Diesel Price

அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |