Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருட்டு குற்றச்சாட்டில் 4 பொலிஸார் விளக்கமறியலில் !

 


இந்தியாவில் இருந்து அமெரிக்க டொலர்கள் மற்றும் தங்கப் பொருட்களை திருடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சரணடைந்த களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்கு அதிகாரிகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் நேற்று இவர்கள் ஆஜராகினர். களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments