Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாரதி அனுமதிப்பத்திரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்


 சாரதி அனுமதிப்பத்திரங்களில் உள்ள மெமரி சிப்களை நீக்கி QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


நாட்டில் ஏறக்குறைய ஐம்பத்தேழு இலட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதோடு அவர்களின் அடையாளம் மற்றும் ஓட்டக்கூடிய வாகன வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் சாரதி அனுமதிப் பத்திர சிப்பைப் போன்ற நினைவக சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன.

மேலும் இந்த அட்டைகள் ஒஸ்ரியாவில் இருந்து யூரோக்களில் பணம் செலுத்தி இறக்குமதி செய்யப்பட்ட அதேவேளை தற்போது பொருளாதார நெருக்கடியால் திறைசேரியில் யூரோ இல்லாததால் இந்த அட்டைகளின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல் உள்ளதோடு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் அச்சடித்து அவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments