Home » » ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பு !

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பு !

 


எஸ்.எம்.எம். முர்ஷித்)

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் படி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (12.09.2022) இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜீ. திசாநாயக்க கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், சார்க் நாடுகளுக்கான பணிப்பாளர் என்.எம்.முகம்மட் அனஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.சீ.ஏ.நாசர், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஜே.எம்.ஹாரிஸ், சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் யூ.எச்.எம்.நஸ்மில், சுங்கத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்.எம்.முர்சிதீன், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி ஜே.எப்.தாஜூன் நிஸா, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, கல்லுரியின் முன்னாள் அதிபர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டதுடன் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்று தற்போது உயர் பதவிகளில் பணிபுரிந்து வரும் முக்கியஸ்தர்களும் அதிதிகளும் பாடசாலை நிருவாகத்தினரால் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.









Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |