Advertisement

Responsive Advertisement

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை..!

 அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை (19) மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக நேற்று முன்தினம் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது, அனைத்து அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய துக்க தினம்

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை..! சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு | September19 Holiday Sri Lanka School Leave

இதேவேளை, அன்றைய தினம் தேசிய துக்க தினமாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரச கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

0 Comments