05-09-2022.*,
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வானது 5.3 என்ற ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காபூல், குனார், லக்மன், நகர்ஹர் பகுதிகளில் குறித்த நில அதிர்வு தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments