Home » » எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு ரணிலின் திட்டம்! பகிரங்கப்படுத்திய வஜிர அபேவர்தன

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு ரணிலின் திட்டம்! பகிரங்கப்படுத்திய வஜிர அபேவர்தன

 


தேசிய கொள்கை

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே அதிபர் ரணிலின் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், ரணில் விக்ரமசிங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், அவர் தனது கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பு

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு ரணிலின் திட்டம்! பகிரங்கப்படுத்திய வஜிர அபேவர்தன | Ranil Sri Lanka Political25 Years

அரசியலமைப்பின் 27ஆவதுசரத்தின்படி 2048 ஆம் ஆண்டுக்குள் இளைய தலைமுறையினருக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது வலுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே அதிபரின் நோக்கமாகும்.

இந்த இலக்கை நனவாக்க அனைவரின் உதவியும் தேவை. அரசியல் அடிப்படையில் சில குழுக்கள் பிளவுபட்டால், அந்தப் பணியை எப்படி நிறைவேற்றுவது என்பதை முதலில் சொல்ல வேண்டும்.

இந்தச் சவாலில் வெற்றிபெற ஒற்றுமையே மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.  

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |