Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவு அட்டை பல மாதங்களாக வழங்கப்படவில்லை


கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான கொடுப்பனவு அட்டை பல மாதங்களாக வழங்கப்படாதுள்ளன.

12 வாரங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான கொடுப்பனவு அட்டை 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறை கடந்த பல வருடங்களாக காணப்பட்ட போதிலும், அந்த செயற்பாடு தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில், நாம் குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்குவிடம் வினவிய போது, அந்த போசாக்கு உணவு பொதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடும்ப நல சேவை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும், போசனை பொதிகளை ஒழுங்கற்ற விதத்தில் வழங்குவதால், குறித்த போசாக்கு திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகும் என குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்

Post a Comment

0 Comments