Home » » மாணவனின் சப்பாத்துக்குள் பாம்பு குட்டி! பதறிப்போன பயணிகள் !

மாணவனின் சப்பாத்துக்குள் பாம்பு குட்டி! பதறிப்போன பயணிகள் !

 


கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 13 வயது மாணவன் ஒருவன் அணிந்திருந்த காலணிக்குள் சின்னஞ்சிறு பாம்புக் குட்டி இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (23) காலை பாடசாலைக்கு மாணவன், பேருந்தில் வந்து கொண்டிருந்த தனது காலணிக்குள் ஏதோ நெளிவதை உணர்ந்து பாடசாலைக்கு வந்து ஷூவை கழற்றினான்.


ஷூவுக்குள் குட்டி பாம்பு இருந்ததை கண்டு அனைவரும் பதறிப்போயுள்ளனர். ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜே.விஜேசூரிய தெரிவிக்கையில் : மாணவனை பாம்பு தீண்டியிருக்கவில்லை என வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

மாணவன் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த பாம்புக் குட்டி வீட்டில் வைத்து மாணவனின் காலணிக்குள் புகுந்திருக்கலாம் எனவும், மாணவன் அதை கவனிக்காது காலணியை அணிந்து வந்திருக்கலாம் எனவும் தெரிய வருகிறது.. இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர், காலணிகளை அணிவதற்கு முன்னர் அதன் உட்புறத்தை பரிசோதிக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |