Advertisement

Responsive Advertisement

பழம்பெரும் திருப்பாதிகளில் ஒன்றான மண்டூர் கந்தசுவாமிக் கோயில் கொடியேற்றம்


 பண்டூரு முகிற் குலங்கள் எமதிறைவர்

மருகர் திருப்பதியீதென்ன

விண்டூர மழைபொழியுஞ் சிறப்பதனால் வளம் மலிந்து தோன்றும்

மண்டூரில் உறைமுருகன்........என சுவாமி விபுலாநந்த அடிகளாரால் மண்டூர் முருகனின் சிறப்புப்பற்றிப் பாடியுள்ளார்.

நம்பிவரும் அடியவர்களுக்கு அபயமளிக்கும் ஆர்ப்பாட்டமில்லாது அருள்வழங்கும் மண்டூரில் உறைமுருகனின் கொடியேற்ற நிகழ்வு இன்று 21. O8. 2022 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும்.

             சூரபன்மனை தொலைத்தவேலாயுதம் மூன்று பிளம்புகளாகப்பிரிந்து  ஒன்று உகந்தை மலையிலும் மற்றொன்று திருக்கோவில் நாவல் மரத்திலும் மற்றொன்று மண்டூரில் தில்லைமரத்திலும்  நிலைபெற்று அடியார்களுக்கு அருள்   பாலித்து வருவதாக மகாவித்துவான் பண்டிதர்  ஆய்வாளர் வி .சி .கந்தையாவின் மட்டக்களப்பு சைவக்கோவில் வரலாற்று நூல் குறிப்பிட்டுள்ளது  இக்கோயில் இப்பகுதியைஆண்ட சிற்றரசர்களின் அங்கீகாரமும் மானியங்களும் கிடைக்கப்பெற்ற திருப்படைக்கோயிலாகும். இக்கோயில் சிறப்புப்பற்றியும் அருள்பற்றியும் பல கவிஞர்களும் புலவர்களும் பாடியுள்ளனர். குடிவழியில் திருவிழாக்கள் பிரிக்கப்பட்டு இருபத்தொருநாட்கள் நடைபெறும். எதிர்வரும் 10. 08. 2022. காலை 10. 00 மணிக்கு வடக்குத்திசையில் மூங்கிலாறும் மட்டக்களப்புவாவியும்சங்கமிக்கும் தீர்த்தக்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அடியார்கள் அனைவரும் வருகை தந்து அப்பனின் அருள் பெற்றுய்ய வேண்டுகின்றேன்.

Post a Comment

0 Comments