உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மைக்கு தீர்வினை பெற உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி மக்களுக்கு ஏற்ற முடிவினை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மைக்கு தீர்வினை குறிப்பிட்டு விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில், ஜனநாயக கட்டமைப்பிற்குள் இணக்கமான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை
நாட்டில் தற்போது பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தில் சொத்துக்களை சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் நாட்டின் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ,மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: