Advertisement

Responsive Advertisement

பெரும் பதற்ற நிலையில் கொழும்பு - போராட்டக்காரர்களால் முற்றுமுழுதாக கைப்பற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்!

 


சிறிலங்கா பிரதமர் அலுவலகம் முற்று முழுதாக போராட்டாக்காரர்களால் கைப்பற்றப்ட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் தற்பொழுது பெருமளவான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில், பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார்.

அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Gallery 

Post a Comment

0 Comments