ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான துபாய் நிபுனின் கள்ளக்காதலியான பெண் ஒருவர் 20 கிராம் ஹெரோயின் மற்றும் பணத் தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்ணை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தரவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைய, விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபராக பெண் போதைப்பொருள் மற்றும் பணத் தொகையுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
0 Comments