Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் போது நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விசாரணை நடத்த இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

 


ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் போது நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விசாரணை நடத்த இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு விழாவை சுயாதீன தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பவும், ஏனைய தொலைக்காட்சிகள் மூலம் ஒரே நேரத்தில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி சிவப்புக் கம்பளத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததும் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர்கள் தானாக இயங்குவது வழக்கம் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தொலைக்காட்சி சேவைகளில் நேரடி ஒளிபரப்பு வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments