கொழும்பில் மட்டுமே
வடக்கு கிழக்கில் இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்று 16,000 கொள்கலன்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்றுடன் முடிவடையும் எரிவாயு
அதன்படி, அண்மையில் நாட்டை வந்தடைந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்றுடன் முடிவடைவதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியள்ளது.
மேலும் 2500 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல் நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரிசையில் நிற்க வேண்டாம்
எனவே பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் லாஃப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு கையிருப்புடன் கூடிய கப்பல் ஒன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments: