Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலையில் ஜனாதிபதி பதக்க தனியாள் கருத்திட்டத்தின் கீழ் மரநடுகை நிகழ்வு

 


 (சித்தா)

கமு/கமுகார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் செல்வி மு.ஹி.கார்னி லெஸ்லி அவர்கள் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் பெறுவதற்கான முயற்சியின் செயற்பாடுகளின் ஒன்றான பொது இடங்களில் பயன்தரும் மரங்களை நடும் நிகழ்வானது இன்று ( 13.06.2022)  கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு, பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், அம்பாரை மாவட்டச் செயலக சுற்றாடல் முன்னோடிக் கழக உத்தியோகஸ்த்தர் திருமதி. புஸ்பராஜினி  செவ்வேள்குமரன், கல்முனைக் கோட்ட சுற்றாடல் முன்னோடிக் கழக இணைப்பாளர் திரு. ரி. ஐங்கரன், கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடிக் கழகப் பொறுப்பாசிரியர் திருமதி இந்துமதி வரதராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு  பயன்தரு மரங்களை நட்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.







Post a Comment

0 Comments