கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று. (07/06/2022) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை தாழங்குடாவை பிறப்பிடமாகவும், முனைக்காடு வாழ்விடமாகவும் கொண்ட எம். எஷ்.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
�கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல் 'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
�கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டிய பனுவல்களிலே கட்டுமானக் குழைப்பை ஏற்படுத்தி புதிய செயலூக்கம் மிக்க புலக்காட்சியை முனைப்பாக்குதல் என்பதனை தமது சிறப்பார்ந்த பணியாகக் கொண்டுள்ளார்.
0 Comments