Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரணிலின் முடிவு ஆபத்தானது!! மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எச்சரிக்கை

 


இலங்கை மத்திய வங்கி மீதான தேவையற்ற தலையீடுகள்

இலங்கை மத்திய வங்கி மீதான தேவையற்ற தலையீடுகள் நாட்டின் பொருளாதார மீட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,

“அரச ஊழியர்களுக்கான சம்பளக்கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

ரணிலின் முடிவு ஆபத்தானது!! மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எச்சரிக்கை

இந்த நடவடிக்கையானது நீரிழிவு நோயாளிக்கு சீனி அதிகளவில் உள்ள உணவை வழங்குவதைப் போன்றதாகும்.

புதிய வரி அறவீடு

இருப்பினும் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் புதிய வரி அறவீட்டு முறைமைகளை பிரதமர் அறிவித்துள்ளமை நம்பிக்கையளிக்கிறது.

இருப்பினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மைக்கு மதிப்பளிக்கவேண்டும்.

ரணிலின் முடிவு ஆபத்தானது!! மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எச்சரிக்கை

மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச்செய்துவிடும்” என்றார்

Post a Comment

0 Comments