Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாயாக உயரும் நிலை!

 


நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாயாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

உணவுப் பற்றாக்குறை, நெல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமது தொழில்துறையும் பாரிய ஆபத்தில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நடுத்தர மக்கள் தற்போது கிராமங்களில் இருந்து பத்து முதல் பதினைந்து மூட்டை நெல் கொள்வனவு செய்வதாகவும் சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய நெல் போதுமானதாக இல்லை என்றும் குறுகிய காலத்தில் அரிசியின் விலை சுமார் 500 ரூபாய் வரை உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments