Advertisement

Responsive Advertisement

சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

 


க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜூன் மாதம் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

இந்த தடை உத்தரவை மீறினால் பரீட்சை சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் சாதாரணதரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments