கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் போடப்பட்டிருந்த வீதித்தடைகளை அகற்றியுள்ளனர்.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணம் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ என தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நுழைவாயில் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 Comments