அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி நாளைய தினம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி நாளை வழமை போன்று 5200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் சுமார் 1,500 தூரப் பேருந்துகள் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: