Home » » வீடுகளை இழந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள்

வீடுகளை இழந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள்


 வன்முறை சம்பவங்கள் காரணமாக வீடுகளை இழந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான தலவத்துகொடை வீடமைப்பு தொகுதியில் தற்காலிக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் 55 வீடுகள் தாக்குதல் மற்றும் தீ வைப்பு காரணமாக அழிவடைந்தன. இதனை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக ஆறு பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் நடத்த சந்திப்பின் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |