அபிவிருத்தி என்ற போர்வையி்ல் இடம்பெற்ற நிதி துஸ்பிரயோகங்களே இன்றைய பிரச்சினைகளுக்கான காரணம் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இலங்கை நாடு வறுமையாக இருக்கின்றபோது அரசாட்சியாளர்கள் பணம் படைத்தவர்களாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் இன்று அரசாங்கத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுகொள்கின்றபோதும் அது வெறுமனே ஏற்றுகொள்ளக்கூடிய தவறுகளாக கருதமுடியாது.
இதன் காரணமாக பாரிய நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தவறுகளுக்காக ஜனாதிபதி பொறுப்பேற்கவேண்டும். அமைச்சரவை இதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
எனவே பொருளாதாரத்தை இந்தளவுக்கு பாரிய பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று அநுரகுமார கேட்டுக்கொண்டார்.
எதனையும் செவிமடுக்காத ஆட்சியாளர் காரணமாகவும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் காரணமாகவே இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இத்தனை பிரச்சினைக்கும் காரணமான கோட்டாபய மற்றும் பிரதமர் அங்கம் வகிக்கின்ற இடைக்கால அரசாங்கத்தில் தாம் அங்கம் வகிக்கப்போவதில்லை என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் இல்லாத ஒரு இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தாம் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments