Advertisement

Responsive Advertisement

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் அவதானம்! நீர் கலந்த எரிபொருள் விநியோகம்

 


நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் எரிபொருட்களில் நீர் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாரம்மலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த எண்ணெய் பௌசர் தொடர்பில் நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பௌசரில் இதற்கு முன்னர் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குருநாகல் பிராந்திய உத்தியோகத்தர்கள் பெற்றோலின் தரம் குறித்து ஆராய்வதற்காக நாரம்மல பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரசாங்கத்தின் தலையீட்டினால் எரிபொருளின் தரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித அண்மையில் தெரிவித்திருந்தார்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதாக நம்பப்படும் எரிபொருள் மாதிரிகள் கூட உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கையில் அரசாங்கம் உரிய ஆய்வுகளை மேற்கொள்வதை நம்ப முடியாது எனவும், அரசாங்கம் வேண்டுமென்றே அவ்வாறான ஆராய்ச்சிகளைத் தவிர்த்து வருவதாகவும், மாதிரிகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.     

Post a Comment

0 Comments