பதவியேற்பு நிகழ்வையும் பகிஷ்கரித்தார்..!
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை பிரதமர் மகிந்த ராஜபக்ச புறக்கணித்து, அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவை தான் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இளையவர்களை அடிப்படையாக கொண்ட அமைச்சரவை குறித்து ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டு வந்த அதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடு கடும் நெருக்கடியில் உள்ளதால் முக்கிய அமைச்சரவை பதவிகளிற்கு அனுபவமுள்ளவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
எனினும் பதவியேற்ற கையோடு புதிய அமைச்சர்கள் அனைவரும் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
0 comments: